இந்தியா, மே 4 -- பணியில் எப்படி அதிக கவனத்துடன் இருப்பது என்று பாருங்கள். இந்த உலகத்தில் எண்ணற்ற இடையூறுகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவற்றை தவிர்த்து உங்கள் மூளையைக் கூராக்கி, ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்செலுத்துவது என்பது சூப்பர் பவர் ஆகும். எனவே உங்கள் மூளையை நீங்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும், சிறப்பாக அதைச் செய்வதும் எப்படி என்று பாருங்கள்.

அன்றாடம் தியானம் செய்யவேண்டும். அதை கவனத்துடன் செய்யவேண்டும். அப்போது உங்களால் நிகழ் காலத்தில் இருக்க முடிகிறது. இது உங்களின் மனஅழுத்தத்தையும் குறைக்கும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது உங்களின் திறனைக் குறைக்கும். மேலும் கவனத்தையும் சிதறடிக்கவும் செய்யும். எனவே ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்ய உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள். அதையும் நல்ல கவனமுடன் செய்து முடியுங்கள். இதனால் ந...