இந்தியா, ஏப்ரல் 21 -- வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்தவகையில், நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவானும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் தங்களது ராசி அடையாளத்தை மாற்றப்போகின்றனர்.

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இதில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவான் ரிஷப ராசிய...