இந்தியா, மே 13 -- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து மருத்துவர் புகழேந்தி கூறியதாவது

தமிழகத்தில் உள்ள முக்கிய 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர்த்து, 34 மருத்துவ கல்லூரிகளுக்கு, அங்குள்ள கட்டமைப்பு வசதி மற்றும் ஆட்கள் பற்றாக்குறை, ஆய்வகக் குறைபாடுகள், முக்கிய துறைகளில் மருத்துவர் பணி நிரப்பப்படாமல் காலியாக இருத்தல் போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கங்களை ஒரு வாரத்திற்குள் அளிக்க தேசிய மருத்துவ கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முக்கிய பணியிடங்கள் 95 சதவீதம் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ளது. குறிப்பாக பொது மருத்துவம், அறுவைசிகிச்சைப் பிரிவு, எலும்பியல் துறை, தோ...