இந்தியா, பிப்ரவரி 24 -- அய்யனார் துணை பிப்ரவரி 24 எபிசோட் : அய்யனார் துணை சீரியலில், கடந்த வாரம் வீட்டை விட்டு ஓடி வந்த நிலாவை, சென்னையில் சேர்க்க சோழன் பெரும்பாடு படும் நிலையில், நிலாவை தேடி வந்த அவளது அப்பாவும், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் சென்னை அருகே நிலாவை சுத்துப் போடுகின்றனர். அத்துடன் முடிந்த கடந்த வார எபிசோடு இன்று தொடர்கிறது. நிலா சென்னை காரை அவளது அப்பா, அண்ணன், மாப்பிள்ளை என அனைவரும் சுற்றி வளைக்க, கில்லி படத்தில் விஜய்யும், த்ரிஷாவும் சுற்றி வளைப்பது போல சுத்துப் போடுகின்றனர்.

காரை விட்ட கீழே இறங்கும் நிலா, பயத்தில் சோழன் கையை பிடித்து நிற்க, அதைப் பார்த்து கடுப்பாகும் மாப்பிள்ளை, 'உன்னை தூக்கிட்டுப் போய், நிச்சயதார்த்தம், கல்யாணத்தை நடத்துவேன்' என்கிறான். நிலாவின் அப்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நிலாவ...