இந்தியா, மே 6 -- அய்யனார் துணை சீரியல் மே 6 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகா சேரனை கட்டிப்பிடித்து நின்று கொண்டிருந்ததை பார்த்த அவரது அப்பா, அம்மா, மாமா ஆகியோர் சேரனை தாக்கியதுடன் அவர் மீது போலீசில் புகாரும் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சேரனின் தம்பிகள் கார்த்திகாவின் அப்பாவை வீடு புகுந்து தாக்கினர்.

மேலும் படிக்க| பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?

இந்த விவகாரம் பெரிதாகவே, அவர்கள் கையோடு போலீசாரை கூட்டிவந்து சேரனையும் அவரது தம்பிகள் 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதை பார்த்து பயந்து போன நிலா, சேரன் மீது எந்த தப்பும் இல்லை என நிரூபிக்க போராடினாள். இதற்காக கார்த்திகாவை நேரில் பார்த்து பேசியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

இதனால், ஆத்திரத்தில் இருந்த நிலா நேர...