இந்தியா, மே 27 -- அய்யனார் துணை சீரியல் மே 27 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் தம்பிகளும், நிலாவும் கார்த்திகா வீட்டிற்கு சென்று அவமானப்பட்டு வந்ததை அண்ணன் திட்டிய நிலையில், குடும்பமே அமைதியாக இருந்தது. சேரனின் அப்பா வெளியே கோபத்தில் உட்கார்ந்து இருந்தார்..

உடனே நிலா என்னால்தான் எல்லாம் என்று நொந்து கொள்ள, சேரன் நான் தம்பிகளிடம் பேசாமல் யாரிடம் பேச போகிறேன் என்று சொல்லி சூழ்நிலையை நார்மலாக்கி வேலைகளை கவனித்தான். இதற்கிடையே நிலா அப்பாவின் கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு டீ கொண்டு கொடுத்தாள்.

அதனைத் தொடர்ந்து மன நிம்மதிக்காக கோயிலுக்கு சென்றாள். அங்கு கோயிலில் கார்த்திகாவை பார்க்க நேரிட்டது. அப்போது நிலாவை பார்த்த கார்த்திகா, நிலாவின் அருகே உட்கார்ந்து, எல்லா பிரச்சினைகளும் என்னால்தான் நடக்கிறது என்று கூறி வருத்தப்பட்டு கொண்டிர...