இந்தியா, மே 21 -- அய்யனார் துணை சீரியல் மே 21 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனுக்கு பெண் பார்க்கப்பட்ட நிலையில், பெண் வீட்டிற்கு பெரியவராக சேரனின் அப்பாவை பேச வைக்க நிலா முடிவு எடுக்கிறாள். ஆனால் சேரனின் தம்பிகளோ, நிச்சயமாக அதற்கெல்லாம் அப்பா செட்டாக மாட்டார் நீங்களே பேசி விடுங்கள் என்று நிலாவிடம் கூறினர்.

ஆனால் நிலா கேட்ட பாடில்லை. இந்த நிலையில் சேரனின் அப்பாவை அழைத்து சேரனுக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்லி, நீங்கள் தான் பெண் வீட்டில் பேச வேண்டும், எப்படி பேசுவீர்கள் என்று கேட்க, அவர் அவருக்கே உரித்தான பாணியில் பேச அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிலா எப்படி பேச வேண்டும் என்று பல்லவனை அப்பாவாக நினைத்து பேசி காண்பித்தாள். இந்த நிலையில் அப்படியே சேரனின் அப்பா அப்படியே பேச அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்...