இந்தியா, மே 1 -- அய்யனார் துணை சீரியல் மே 1 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், பல்லவன் தான் விரும்பும் பெண்ணை நிலாவிற்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக அவளை காலேஜிற்கு அழைத்து செல்கிறான். அப்போது, சோழன் நிலாவிடம் சொன்ன பல பொய்கள் நிலாவிற்கு தெரிய வந்தது. பல்லவன் படித்து முடித்து வெளிநாட்டிற்கு செல்வான், பாண்டியன் செய்யும் வேலையை மறைத்தது என பல விஷயம் நிலாவிற்கு தெரிய வருகிறது.

மேலும் படிக்க| அற்புத படைப்பு.. மரண மொக்கை.. கலந்து அடிக்கும் ரெட்ரோ ட்விட்டர் ரிவ்யூ.. என்ன சொல்கிறார்கள் சூர்யா ஃபேன்ஸ்?

இதை எல்லாம் சொல்லி, நிலா புலம்பிய நிலையில், சோழன் சொல்லிய பொய்களை எல்லாம் நிலாவிடம் உடைத்து கூற வேண்டும் என பல்லவன் முடிவு செய்கிறான். இது எதையும் அறியாத சோழன், தான் வேலை செய்த டிராவல்ஸ் முதலாளியிடம் மீண்டும் வேலை தருமாரு கெஞ்சிக் கொண்டிருக்கிறான்...