இந்தியா, மார்ச் 31 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 31 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், வீட்டில் சேரன் மட்டும் தனியாக வேலை செய்து வருவதை பார்த்து கோபமடைந்த நிலா, வீட்டில் உள்ளவர்களை எழுப்ப நினைத்தாள். சேரன் வேண்டாம் என தடுக்கவே சோழனை மட்டும் எழுப்புவதற்கு சென்றாள். அப்போது, பாண்டியனின் கால் தடுக்கியதில், நிலா கையில் வைத்திருந்த சொம்பு தண்ணீரோடு அப்படியே பாண்டியன் முகத்தின் மீது விழுந்தது.

மேலும் படிக்க| நிலாவின் 2ஆம் திருமமம்.. அவமானத்தில் துடிக்கும் அப்பா.. அய்யனார் துணை சீரியல்

தூங்கிக் கொண்டிருந்தவர் முகத்தில் திடீரென தண்ணீர் விழுந்ததால் கோபமடைந்த பாண்டியன் தன் மீது யார் தண்ணீர் ஊற்றினார்கள் என்பது கூட தெரியாமல் வாயிலேயே வசைபாடியுள்ளார். பாண்டியனிடமிருந்து வந்த காது கூசும் வார்த்தைகளைக் கேட்ட நிலாவும் மற்றவர்களும் காதைப் பொத்திக் கொள...