இந்தியா, மார்ச் 29 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 29 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சோழன் வீட்டில் தங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலா, சோழனை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஹாஸ்டலாக ஏறி இறங்குகிறார். ஆனால், எங்கேயும் ஐடி ப்ரூப் இல்லாமல் ஹாஸ்டலிலும் பிஜியிலும் தங்க அனுமதிக்காததால் நிலா வெறுத்துப் போகிறாள். இதைப் பார்த்த சோழன் நடப்பதெல்லாம் நன்மைக்கே என சந்தோஷப்படுகிறான்.

மேலும் படிக்க| சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்

இப்படி இருக்க, சோழனை நமது தேவைக்காக அலைய வைப்பதாக நினைத்த நிலா, தன் கையில் அணிந்திருக்கும் வளையலை கழட்டி கொடுத்து அடகு வைக்க வேண்டும் என உதவி கேட்கிறாள். இதையடுத்து இருவரும் அடகு கடைக்கு செல்கின்றனர். அப்போது, நிலாவின் வளையலுக்கு குறைவான காசு தருவதாக சொன்ன சேட்டிடம் சோழன் பேரம் பேசி அதிக தொகைக்கு அ...