இந்தியா, மார்ச் 24 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 24 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்று, நிலா, சோழனின் அண்ணன் சேரனிடம் எங்களுக்கு நடந்தது கல்யாணமே இல்ல. எங்க அப்பாவ ஏமாத்த நடத்தின நாடகம்ன்னு உண்மையை சொன்னதுடன், இந்த ரிசப்ஷனுக்கு வந்து நிக்க மாட்டேன்னு உறுதியாக சொன்னதால், வீட்டிற்கு முன் கூடியிருந்த ஊர்க்காரர்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டு கிளம்ப சொல்ல சேரன் தயாரானான்.

மேலும் படிக்க: உண்மையை உடைத்த நிலா.. துக்கத்தில் கதறிய சேரன்.. அய்யனார் துணை சீரியல்

இதையடுத்து, அவன் ரிசப்ஷன் மேடை ஏறி, எல்லோரையும் கிளம்ப சொல்லும் முன்னே, நிலா சேரனை கூப்பிட்டு அவனை தடுத்து நிறுத்தி மேடை ஏறினாள். இதைப் பார்த்த சேரன் நிலாவை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னான். சோழனையும் நிலாவையும் ஜோடியாக பார்த்த மக்கள் செய்தியில் சொன்னது உண்மை தான் என சொல்லி முனுமுனு...