இந்தியா, மார்ச் 19 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 19 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கல்யாண சர்ட்டிபிகேட் வாங்க போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதே நிலாவை சமாளிக்க முடியாமல் வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் அடித்து சமாளித்து கொண்டிருந்தான் சோழன். அந்த பிரச்சனை எல்லாம் இனி இருக்காது என வீட்டிற்கு வந்து இறங்குவதற்கு முன்பே சோழனுக்குள் பூகம்பமே வெடித்தது.

மேலும் படிக்க: ரிசப்ஷன் ஏற்பாட்டில் நடந்த காதல் புரொபோசல்.. அய்யனார் துணை சீரியல்

ஊர் வாயை அடைக்க நினைத்து தன் அண்ணன், தம்பிகள் செய்த ஏற்பாட்டை பார்த்து ஆட்டம் கண்டான் சோழன். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கலக்கத்தை சமாளிக்க தெரியாமல், அவனது அண்ணன்களிடம் கோபமாய் கொட்டித் தீர்த்தான். கையில் இருக்கும் அத்தனை காசையும் கொட்டி சோழனுக்காக ஏற்பாடு செய்து, ஊர் முன் அசிங்கப்பட்டு வந்து நின்று கொண்டிருக்க...