இந்தியா, மார்ச் 5 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 05 எபிசோட் : சோழனுக்கும் நிலாவும் அய்யனார் துணை வீட்டுக்கு வந்து சேர, ஆரத்தி எடுக்க வந்த அத்தை மகள் கார்த்திகாவை, அவளது அம்மா தடுக்க, அதன் பின் சோழனின் தம்பியே ஆரத்தி எடுக்கிறான். இந்த நேரத்தில் போதையில் வரும் சோழனின் அப்பா, மைக் செட்டில் போடும் பாடலுக்கு ஊரார் முன்னிலையில் ஆட்டம் போடுகிறார். அதைப் பார்த்த ஊரே சிரிக்க, சோழன் குடும்பத்தாருக்கு ஒரு மாதிரி ஆகிறது. சேரன் அவரை சமாதானம் செய்து, அமைதியாக்குகிறார்.

மேலும் படிக்க | மொத்தமாக மாறிய சக்தி.. அதிர்ச்சியில் பெண்கள் கூட்டம்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடந்தது இது தான்

அதன் பின், வீட்டு உள்ளே வரும் நிலாவிடம், தன் சகோதரர்களை அறிமுகம் செய்து வைக்கிறான் சோழன். வீடு, அங்கிருப்பவர்கள் அனைவரையும் ஏற இறங்க பார்க்கும் நிலா, சேரனிடம...