இந்தியா, பிப்ரவரி 27 -- அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 27 எபிசோட் : போலீஸ் முன்னிலையில் நிலாவின் கழுத்தின் சோழன் தாலி கட்ட, உடைந்து போகிறார் அவளது அப்பா. 'சார் வந்தது வந்துட்டீங்க.. பொண்ண வாழ்த்திட்டு போங்க சார்' என்று போலீஸ்காரர் கூற, 'இவளை வாழ்த்தணுமா?.. இவனை கல்யாணம் பண்ணத்துக்கு இவ எச்சி இலை தான் பொறுக்குவா.. இனி எந்த பிரச்னை வந்தாலும், எங்களிடம் வராதே, இனி நீ எங்கள் பெண் இல்லை' என்று சாபம் விடுக்கிறார் நிலாவின் அப்பா. கோபத்திற்கு மேலே செல்லும் நிலாவின் அண்ணன், 'டேய் உன்னை உயிரோடு விடமாட்டேன்டா..' என சோழனை எச்சரிக்கிறான். அதை கேட்கும் போலீஸ்காரர்கள், போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று மிரட்டுகின்றனர்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்: முடிவு கட்ட நினைக்கும் சக்தி.. ஆரம்பிக்கும் பார்கவி.....