இந்தியா, ஜூன் 19 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் எல்லோரும் பாத்திரங்களை தேடும் பொழுது கிடைத்த பழைய போட்டோக்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களது பழைய போட்டோக்களை பார்த்து அது தொடர்பான நினைவுகளை நினைவு கூர்ந்து கலாய்த்தனர்.

சோழன்,சேரன், பாண்டியன் ஆகியோருடன் அவரது அம்மா நின்று எடுத்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், இடையே வந்த பல்லவன் நான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் மட்டும் இல்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தான். இந்த நிலையில் பிறர் பதறினர்.

இந்த நிலையில் சேரன் போட்டோக்களை தேடியதெல்லாம் போதும்; நாம் அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சொல்ல, அவனை நிறுத்திய பல்லவன் நீங்களெல்லாம் அம்மாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறீர்கள்..

ஆனால், நான் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இல்லையே ஏ...