இந்தியா, ஜூன் 17 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் பாண்டியும், பல்லவனும் கடையில் நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ஒருவர் மூத்த அண்ணன் சேரனின் திருமணம் நின்று போனது பற்றி பேசினார் இதில் மனம் நொந்த பல்லவன் நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கிளம்பினான்.

இந்த நேரத்தில் பாண்டியை பார்க்க வானதி அங்கு வந்தாள். அவள் பாண்டியனிடம் விஷயத்தை கேள்வி பட்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது. உங்கள் வீட்டில் ஒரு பெண் (நிலா) வந்துவிட்டார் என்பது குறித்து பேசியே நம்முடைய காதலுக்கு நான் வீட்டில் சம்மதம் வாங்கி வைத்திருக்கிறேன். ஆகையால், நம்முடைய கல்யாணத்திற்கு இனி பிரச்சினை வராது என்று நினைக்கிறேன் என்று கூறினாள்.

வானதி ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, பாண்டியன் அண்ணனுக்கு கல்யாணம் நின்று போனதையும், அவருக்கு அடுத்து எப்ப...