இந்தியா, ஜூன் 13 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 13 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் பாண்டி சோழனிடம் கவிதாவின் வீட்டில் கல்யாண செலவு அனைத்தையும் நீயே பார்த்துக் கொள்கிறாய் என்று கூறினாயே, எப்படி செய்யப் போகிறாய். பணம் வைத்திருக்கிறாயா என்று கேட்டான்.

அதற்கு சோழன் என்னிடம் எங்கு பணம் இருக்கிறது?.. நான் எங்கே அப்படி சொன்னேன் என்று ஒரேடியாக எல்லாவற்றையும் மாற்றிப்பேச, கடுப்பான பாண்டி தயவு செய்து விளையாடாதே; இந்த விஷயம் மிக மிக முக்கியமானது; பணத்திற்கு என்ன செய்யப் போகிறாய் என்று மீண்டும் கேட்டான்

ஆனால், சோழன் மீண்டும் அலட்சியமாக பதில் சொல்ல, கோபமான பாண்டி உன்னால் எதுவுமே செய்ய முடியாது. நீ தேவையில்லாத வேலையை செய்து வைத்திருக்கிறாய்.

உன்னால் கல்யாண செலவுக்கு 10 பைசா கூட கொண்டு வர முடியாது; நீ ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று சொல்ல, க...