இந்தியா, ஏப்ரல் 5 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 5 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்று, நிலா தனது அப்பாவும் அண்ணனும் தன்னிடம் பேச மறுத்து திட்டியதை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தார். இதை நினைத்து கவலைப்பட்ட சோழன் நிலாவை சமாதானம் செய்ய முயன்றான். இருந்தும் அது பயனளிக்காததால் நிலாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என நினைத்தான்.

மேலும் படிக்க| குடும்பத்தை நினைத்து கதறும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

இதை நிலாவிடம் கேட்டதற்கு இந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்வதை நினைத்து பயந்தாள். பின், வெளியே சென்றால் மனசு ஓரளவுக்கு ரிலாக்ஸாக மாறும் என சொல்லி நிலாவை வெளியே அழைத்து வர சம்மதம் வாங்கினான். காரில் ஊர் சுற்ற போகிறோம் என நினைத்த நிலாவை சோழன் பைக்கில் கூட்டிப் போனான். இதனை சேரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுமார் ஒரு மணி நேரத்த...