இந்தியா, ஏப்ரல் 26 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 26 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலாவிற்கு சோழன் தன்னிடம் சொன்ன அத்தனை பொய்களும் நிலாவிற்கு அடுத்தடுத்து தெரிய வருகிறது. அத்துடன், வீட்டிற்குள் நடேசன் செய்த அடுத்தடுத்த செயல்களால் மனமுடைந்து போகிறாள் நிலா. இதனால், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நிலா வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டாள்.

மேலும் படிக்க| ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கவேண்டிய ஸ்போர்ட்ஸ் மூவிஸ்! கூஸ்பம்ப்ஸ் கேரண்டி! மிஸ் பண்ணிடாதீங்க!

இதை சேரனின் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக மட்டும் சேரனிடம் உண்மையை சொன்னாள். இதைக் கேட்டு சேரனுடன் சோழனும் ஷாக் ஆகி நின்றான். இதன் பின் நிலாவிடம் போய் என்மேல் இருக்கும் கோவத்தில் தான் வீட்டை விட்டு போகிறாயா எனக் கேட்டு சமாதானம் செய்ய வருகிறான். ஆனால், நிலா சோழனின் முகத்தை கூட பார்த்து பேச விரும்ப...