இந்தியா, ஏப்ரல் 15 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், தனது சர்ட்டிபிகேட்டை வாங்க திருவண்ணாமலையில் உள்ள வீட்டிற்கு வந்தார். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவளை புரிந்து கொள்ளாமல் இதே வீட்டில் எங்களுடன் இருந்துவிடுமாறும் வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் கூறினர். இதற்கு நிலா சம்மதிக்காததால், அவளது சர்ட்டிபிகேட்டை அவள் கண் முன்னே எரித்து சாம்பலாக்கினர்.

மேலும் படிங்க| 10 எண்றதுக்குள்ள மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நிலா, இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இனி நான் உங்களை நினைத்து எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக மாட்டேன். சர்ட்டிபிகேட் இல்லைன்னாலும் நான் என் வாழ்க்கையில் முன்னேறுவேன் என சவால் விட்டு பல்லவனை அங்கிருந்து கூட்டி வந்தாள்....