இந்தியா, ஏப்ரல் 12 -- அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், வேலைக்கு போக வேண்டும் என்ற கனவை நனவாக்க தன் வீட்டில் உள்ள சர்ட்டிபிகேட், ஐடி ப்ரூப் போன்றவற்றை எடுக்க நிலா திருவண்ணாமலையில் உள்ள அவளது வீட்டிற்கு செல்கிறாள். அவள் தனியாகத் தான் வரவேண்டும் சோழனோடு வரக்கூடாது என அவளுடைய அண்ணி கூறியதால், பல்லவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

மேலும் படிக்க| பாட்டி வீட்டிற்கு விருந்திற்கு வரும் கார்த்தி- ரேவதி கார்த்திகை தீபம் சீரியல்

வரும் வழியில் பதற்றத்துடனே இருந்த நிலா, வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்லி எப்படியாவது அவர்களுக்கு தன் நிலைமையை புரிய வைத்துவிடலாம் என நினைத்தாள். ஆனால். நிலா வீட்டில் பல்லவனை வெளியே நிற்க வைத்துவிட்டு நிலாவை மட்டும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு பார்த்தால், வீட்டில் நிலாவின் அப்ப...