இந்தியா, ஏப்ரல் 25 -- பிறக்கும்போது ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல.. ஆனால் இறக்கும்போதும் ஏழையாய் சாவதுதான் உன் தவறு என உலக பணக்காரரான பில்கேட்ஸ் கூறியிருக்கிறார். நம்மில் பலருக்கு சொந்தமாக பிசினஸ் செய்து அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை, கனவு, லட்சியம் இருக்கும். முதலில் அது நமக்கு தெரிந்த தொழிலாக இருக்க வேண்டும். கடன் வாங்கி சொந்த பிசினஸ் செய்தாலும் அதில் வெற்றி அடைவோமா?, தோல்வியை சந்திப்போமா? என்ற சந்தேகத்தால் சொந்த பிசினஸ் கைகூடாமல் போய் விடும்.

உண்மையில் ஒருவருக்கு சொந்த பிசினஸ் அமையுமா..? அல்லது அடிமை தொழிலா..? (அரசு வேலை), வேலையா..? (தனியார் வேலை) என்பதை அவரவர் ஜாதகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக தொழில் செய்ய லக்னம், லக்னாதிபதி வலிமை பெற்றிருக்க வேண்டும். குறைந்தது லக்னமும், லக்னாதிபதியும் நல்ல நிலையிலாவது இருக்க வேண்டும் என்பது ம...