இந்தியா, ஏப்ரல் 17 -- பெண்கள் குறித்தும், சைவம் மற்றும் வைணவ சமய குறியீடுகள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடியின் இந்து சமயங்களை விலைமாதுவுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சைப் பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்....