இந்தியா, பிப்ரவரி 26 -- வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் தீவிர ரசிகர் ஒருவர், அப்படம் எடுக்கப்பட்ட அமெரிக்கப் பகுதிகளை நேரில் சென்று பார்த்து, வாரணம் ஆயிரம் திரைப்படம் பற்றிய தன் உணர்வுகளை எழுதியிருக்கிறார். அதற்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் பதிலளித்திருக்கிறார். இப்பதிவு வைரல் ஆகியிர்க்கிறது.

ராய் கன்ட் (Roy Kent) என்னும் எக்ஸ் பதிவர், கவுதம் வாசுதேவ் மேனன், எடுத்த வாரணம் ஆயிரம் படத்தின் கதாநாயகி மேக்னா தங்கியிருந்த வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதுகுறித்து நெகிழ்ச்சி பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எழுதியிருக்கிறார்.

இதுதொடர்பாக ராய் கன்ட் எழுதிய எக்ஸ் பதிவில், ''என் அன்புக்குரிய கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களே,

உங்களுக்கு இந்த இடம் நிச்சயம் நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது பெர்க்லி நகரில் உள்ள சிக்மா ஃப...