இந்தியா, மார்ச் 13 -- பாலிவுட் திரையுலகின் ஐகானிக் ஹீரோக்களாக திகழ்பவர்கள் அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான். தங்களுக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளாங்களை கொண்டுள்ள இவர்களை பற்றிய ஒரு செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அமீர் கான் மார்ச் 14ஆம் தேதி தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்கு முன்பாக பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் மிகப்பெரிய அளவில் தனது வீட்டில் நேற்றிரவு கொண்டாடியுள்ளார். இதுவரை தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடியது இல்லை என்றாலும், இதுதான் முதல் முறை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டின் கான் நடிகர்கள் என்று அழைக்கப்படும் ஷாருக், சல்மான் கான் ஆகியோர் அமீர் கான் வீட்டிற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அமீர் கான் சல்மான் கானை அவரது வீட்டில் இரு...