இந்தியா, ஜூலை 2 -- மக்களிடையே அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வின் ஒரு பகுதியாக 'கார நீர்' என்பது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. பல்வேறு விதமான தாதுக்கள் நிறைந்ததாக கூறப்படும் இந்த நீர் பருகுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. உடலின் நீரேற்ற அளவை இந்த நீர் கணிசமாக அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா அல்லது வெறும் விளம்பரமா?, இந்த கார நீர் நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்த தெரிந்து கொள்ளலாம்.

நவீன வாழ்க்கை முறையில், மக்கள் சிற்றுண்டிகளிலிருந்து தோல் பராமரிப்பு வரை அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கூடுதல் நன்மைகளை பெற விரும்புகிறார்கள். இதில் தண்ணீரும் விதிவிலக்கல்ல. மினரல் வாட்டரில் இருந்து தற்போது Alkaline Water, அதாவது "கார நீர்" என்ற புதுமையான வடிவத்தை எடுத்துள்ளது. இந்த நீர் உடல் ஆரோ...