இந்தியா, மார்ச் 19 -- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்று திரும்பி உள்ளார். நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர், இன்று அதிகாலை சென்னை திரும்பி இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்த நடசாரன் மாளிகையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது விநியோகம் செய்யும் மது ஆலைகளின் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் வரை சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து மது கொள்முதல் மற்றும் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து உள்ளதாக அமலாக்கத்துறை செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த முறைகேட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் க...