இந்தியா, ஏப்ரல் 26 -- Kedarnath Temple: நமது நாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகே இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோயில்தான் கேதார்நாத் கோயில். ஏப்ரல் மாதம் அட்சய திருதியை முதல் அக்டோபர் மாதம் தீபாவளி வரை மட்டுமே இந்த கோயில் திறந்திருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்துள்ளன அதில் முதன்மையாக விளங்குவது இந்த கோயில்தான். குளிர்காலத்தில் ஆறு மாதங்கள் கேதார்நாத் கோயில் மூடப்பட்டிருக்கும். அந்த காலகட்டத்தில் தெய்வத்தின் சிலையானது உஜமத்தில் இருக்கக்கூடிய ஓம்காரேஸ்வர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்கள் வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த கேத்தார்நாத் கோயிலில் சிவலிங்கம் முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கின்றது. அதன் காரணமாகவே இந்த கோயில் தனுத்துவமாக கருதப்படுகிறது. இந்த கேதார்நாத் கோயில...