இந்தியா, ஏப்ரல் 15 -- தேநீர் பிரியர்களுக்கு இஞ்சி டீ, மசாலா டீ, கிரீன் டீ மற்றும் செம்பருத்தி டீ என எண்ணற்ற தேர்வுகள் உள்ளது. அதில் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அன்னாசிப்பழ டீயையும் சேர்த்துக்கொள்ளலாம். பழத்தின் தோல் மற்றும் சதை இரண்டையும் பயன்படுத்தி அன்னாசிப் பழ தேநீரை நீங்கள் தயாரிக்கலாம். பழத்தின் தோல்களை சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அன்னாசியின் தோலில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. அதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

அன்னாசிப்பழத்தை ஊறவைத்த தயாரிக்கப்படுவது, இந்த கோடைக்கால பானத்தை தயாரிக்க அன்னாசிப் பழத்தின் தோல், சதை என அனைத்தையும் பயன்படுத்தவேண்டும். அன்னாசிப்பழத்தோலில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ரோமெலின் உள்ளது. இதன் தோலைத்தான் பயன்படுத்தி இந்த தேநீர் தயார...