இந்தியா, ஏப்ரல் 4 -- அன்னாசிப்பழம் என்பது ஒரு சுவையான பழம் மட்டும் கிடையாது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நலன்களும் நிறைந்தது. இதை நீங்கள் ஏன் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்?

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீஸ் மறுறும் முக்கிய ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன. இவை மட்டுமின்றி இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடல்களை ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து காக்கிறது.

அன்னாசிப் பழத்தில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன. இது உங்கள் உடல் தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ரத்த வெள்ளை அணுக்கள் உற்பதிதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது செரிமான எண்சைம் ஆகும். இது உடலில் புரத...