இந்தியா, ஏப்ரல் 12 -- Hanuman Jayanti: ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களுக்கு ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு பண்டிகை ஒரு ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அனுமன் ஜெயந்தி மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.

அதாவது வட இந்தியாவில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பங்குனி பௌர்ணமி திருநாளான இன்று வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி திருநாளான இன்று ஜோதிட சாஸ்திரத்தின் படி பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ள...