இந்தியா, மே 16 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசிக்கு சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

புதன் பகவான் நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருகின்றார். இவர் புத்திசாலித்தனம் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். தற்போது புதன் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வ...