இந்தியா, ஜூலை 2 -- நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக விளங்க கூடிய சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். சுக்கிரன் மாதத்துக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக்கூடியவராக உள்ளார்.

கடந்த ஜூன் மாத இறுதியில் சுக்கிரன் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் சஞ்சாரம் அடைந்தார். இதைத்தொர்ந்து அடுத்ததாக இந்த மாத இறுதியில் மிதுன ராசியில் சஞ்சாரிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தின் போது சுக்கிரன் வியாழனுடன் இணைந்து இருப்பார். செல்வத்தின் காரணியான சுக்கிரனின் மிதுன ராசி சஞ்சாரம் ஜூலை 26 அன்று காலை 09:02 மணிக்கு நடைபெறுகிறது.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும் தாக்கம் ஏற...