இந்தியா, ஜூன் 25 -- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான 2ஆவது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 20 மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 25) ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கிடையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் வில்லங்கம் நடப்பது போன்று பொய்க் கதையை திமுக ஐடி விங் பரப்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக கரூர், அரவக்குறிச்சி தொகுதி குறித்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கத்தை பொதுச்செயலாளர் ஏற்றுக்கொள்ளாமல் விஜயபாஸ்கரை கடிந்து கொண்டதாகவும், வாக்குவாதம் நடந்ததாகவும் கற்பனைச் செய்தியை பரப்பிவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், உண்மை என்...