இந்தியா, ஏப்ரல் 22 -- அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந...