இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, பாஜக உடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசியல், அதிமுக-பாஜக கூட்டணி, உச்சநீதிமன்ற விமர்சனங்கள், மற்றும் மதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் ஆர்டர்" என்று கூறிய கருத்தை முழுமையாக ஆதரிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சக்தியாக வலிமை பெற பகீரத முயற்சி செய்கிறார்கள். திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி காலூன்றி நிற்க வேண்டும்...