இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் போருக்கு எடப்பாடி பழனிசாமி நன்கு தயாராகி வருகிறார் என இந்து குழும இயக்குநர் மாலினி பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை பிரபல ஊடகவியலாளரும், தி இந்து பப்ளிகேஷன்ஸ் குழுமத்தின் தலைவருமான மாலினி பார்த்தசாரதி அவரது இல்லத்தில் சந்தித்தார். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணியை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமியுடன் மாலினி நடத்திய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் தமிழக முதல்வர் இபிஎஸ் தமிழ்நாட...