இந்தியா, மார்ச் 7 -- கே.டி.ராஜேந்திர பாலாஜியை மீறி விருதுநகரில் என்னடா செய்துவிட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்து உள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்த அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறைந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல் செயல்படுவதாக மாஃபா பாண்டியராஜன் குற்றம்சாட்டி இருந்தார்.

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இயக்கத்தில் இருப்பவன் நான், சிலபேர் என்னை குறுநில மன்னர் என்கிறான். அதிமுகவை எதிர்க்கிற திமுகவுக்கு நான் க...