இந்தியா, மே 25 -- காலையில் நீங்கள் பழகக்கூடிய ஆரோக்கிய பழக்கங்கள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதில் ஒரு அதிகாலை பழக்கம்தான், பீட்ரூட், இஞ்சி, எலுமிச்சை பழத்தின் சாற்றை வெறும் வயிற்றில் பருகுவது. நைட்ரேட்கள் அதிகம் கொண்ட பீட்ரூட் சாறு இதயத்தின் இயக்கத்தை உடற்பயிற்சியின்போது அதிகரிக்கிறது. இஞ்சியின் மருத்துவ குணங்கள், மரபணு நோய்கள், நீரிழிவு நோய்கள், இதய நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்கிறது. இஞ்சியில் உள்ள ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எண்ணற்ற உட்பொருட்கள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள பாலிஃபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் சோர...