இந்தியா, மே 2 -- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய் கடி தொல்லை குறித்தான ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை பலருக்கும் பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. குழந்தைகள் தொடங்கி நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அளவில் அதிக நாய்கள் கடிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 ஆவது இடத்தில் உள்ளது.

இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், " கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ...