இந்தியா, மே 11 -- அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை அடையாளம் தெரியாத நபர் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா அவர்களின் நினைவிடமும், கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடமும் உள்ளது. சென்னையில் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலை, அடையாளம் தெரியாத நபர் வீச முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: 'திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணி தொடருமா?' திருமாவளவன் பரபரப்பு பதில்!

அதில் அடையாளம் தெரியாத, அந்த நபர் பாட்டிலை கொண்டு வந்து அதில் மண்ணெண்ணெய்யை நிரப்பி, அதனை பற்றவைத்து இரண்டு நினைவிடங்களுக்கும் இடையே வீச முயன்றதாகத் தெரியவருகிறது. பின்னர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக...