இந்தியா, பிப்ரவரி 28 -- அண்ணா சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கோவிலுக்கு வந்த சண்முகம் என் தங்கச்சி மீதான களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி பண்ணது என்பதை கண்டு பிடிக்கணும், எனக்கு ஒரு வழியை காட்டு என முருகனிடம் வேண்டுகிறான்.

மறுபக்கம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகப்பட்டு அவனை பின்தொடர்ந்து வந்த நிலையில் முகமூடி அணிந்து முகத்தை மூடியபடி சரக்கு வாங்கி கொண்டு அந்த டீ கடையில் வேலை செய்தவனை சந்திக்கிறான். இதனால் இது அனைத்தும் வெங்கடேஷின் வேலை என்பது தெரிய வ...