இந்தியா, பிப்ரவரி 24 -- அண்ணா சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சௌந்தரபாண்டி சொட்டு மருந்தை வெங்கடேஷிடம் கொடுத்து டீ-ல் கலந்து ரத்னா, அறிவழகனுக்கு கொடுக்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வெங்கடேஷ் அந்த சொட்டு மருந்தை பியூன் ஒருவனிடம் கொடுத்து டீயில் கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான். பியூன் சொட்டு மருந்தை கலந்த டி கொண்டு சென்று ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்கிறான். அதன் பிறகு வெங்கடேஷ் வீட்டுக்கு வர இசக்கி உடம்பு முடியலன்னு சொல்லிட்டு எங்க போயிருந்தீங்க என்று கேள்வி கேட்க வெங்கடேஷ்...