இந்தியா, ஜூன் 3 -- அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துப்பாண்டி துப்பாக்கியை எடுத்துக்கொள்ள வைஜெயந்தி ஆட்கள் கனியை கடத்திக் கொல்ல திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கனியை ஸ்கூலில் விட்டு சண்முகம் கிளம்பிய பிறகு ரவுடிகள் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். மறுபக்கம் வைகுண்டத்தை பார்ப்பதற்காக இசக்கி, பாக்கியம் என எல்லோரும் சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர்.

இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் சூடாமணி தான் உன் உயிரை காப்பாற்றி இருக்காங்க என்று சொல்லி கண்கலங்கி பேசிக் கொள்கின்றனர். சண்முகம் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஷயம் அ...