இந்தியா, ஏப்ரல் 19 -- "தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு OUT OF CONTROL-தான்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "Out of Contact" -இல் இருப்பதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தள பதிவில் பதிவிட்டுள்ள இடுகையில், திரு.மு.க.ஸ்டாலின், நேற்று நீங்கள் "Out of Control" இருப்பதாகச் சொன்னீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் தமிழக மக்களுடன் "Out of Contact"-இல்தான் இருக்கிறீர்கள், மேலும் அவர்கள் உங்கள் ஆட்சியின் கோபத்தைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என பதிவிட்டு உள்ளார்.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து, "டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. தமிழ்நாடு எப்போதும்...