இந்தியா, ஏப்ரல் 21 -- இந்து நாட்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் யாவும் வளரும். வாங்கும் பொருட்கள் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை அன்று புதன்கிழமையுடன் ரோகிணி நட்சத்திரம் இணைவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியையும், குபேரனையும் வழிபட்டு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.

இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் சில பொருட்களை நன்கொடையாக அளிப்பது மற்றும் சில பொருட்களை வா...