இந்தியா, ஏப்ரல் 28 -- ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். ஜோதிடத்தின் படி, இந்த நாளில் தொடங்கும் செயல்கள் யாவும் வளரும். வாங்கும் பொருட்கள் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற ஏப்ரல் 29ம் தேதி அன்று மாலை 05:31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30 அன்று பிற்பகல் 02:12 மணிக்கு நிறைவு பெறும். இந்த நாளில் வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை ஆகும். சுப முகூர்த்தத்தின் மொத்த காலம் 06 மணி 37 நிமிடங்கள். இந்த நேரத்தில், வழிபாட்டுடன் புதுமனை புகுதலையும் செய்யலாம்

மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளியை எடுக்க...