இந்தியா, ஏப்ரல் 30 -- ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. இந்த நாளில் செய்யும் செயல்கள் யாவும் வளரும் என்பது நம்பிக்கை. செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு அட்சய திருதியை அதாவது 2025ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அன்று மாலை 05:31 மணி முதல் ஏப்ரல் 30 அன்று பிற்பகல் 02:12 மணிக்கு நிறைவு பெறும். உதய தேதியின்படி, இந்த பண்டிகை ஏப்ரல் 30 ஆம் தேதி மட்டுமே கொண்டாடப்படும்.

ஏப்ரல் 30 ஆம் தேதியான இன்று காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரம் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க...