இந்தியா, மே 18 -- ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸில் ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குல்சார் ஹவுஸ் அருகே கிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்து மேல் தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 11 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 17 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தெலங்கானா ...