இந்தியா, ஜூலை 1 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவன் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய கருப்பனின் செல்போன் வாயிலாக மறைந்த இளைஞர் அஜித் குமாரியின் தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த காணொளியை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ஸ்டாலின் , அதில், திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ம...